தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?- பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்துக்கணிப்பு


தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?- பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்துக்கணிப்பு
x
தினத்தந்தி 5 April 2019 12:30 PM IST (Updated: 5 April 2019 12:30 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?என்பது குறித்து பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்துக்கணிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறியும் பொருட்டு பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடத் தொடங்கி உள்ளன.

அந்த வகையில்  பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 21 ஆயிரத்து 464 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது.

கருத்துக் கணிப்பு விவரம் வருமாறு:-

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு  27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு  உள்ளது.

அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளிலும், அமமுக 1 முதல் 2 தொகுதிகள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 

இதேபோல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில், திமுகவுக்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.
1 More update

Next Story