ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் திடீர் நீக்கம்

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் அனில் சந்திர புனேதாவை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
புதுடெல்லி,
ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் அனில் சந்திர புனேதாவை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக எல்.வி.சுப்பிரமணியம் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தல்களை மீறியதாக கூறி ஆந்திர புலானாய்வு துறை டி.ஜி.பி. ஏ.பி.வெங்கடேஸ்வர ராவ் மற்றும் இரு உயர் போலீஸ் அதிகாரிகளை வேறு பணிக்கு மாற்றுமாறு ஆந்திர மாநில அரசுக்கு சமீபத்தில் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தலைமைச் செயலாளர் அனில் சந்திர புனேதா ஆந்திர ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் அவரை தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து வேறு பதவிக்கு மாற்றி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story






