தேர்தல் செய்திகள்

”பிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும்” யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை + "||" + Be Careful": Poll Body Warns Yogi Adityanath For "PM Modi's Army" Remark

”பிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும்” யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

”பிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும்” யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
”பிரசாரத்தில் கவனமாக பேச வேண்டும்” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள்; ஆனால், பிரதமர் மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையுமே பரிசாக வழங்குகிறார். இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக  உள்ளது என்று பேசினார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆதித்யநாத்தின் பேச்சு அடங்கிய வீடியோவை அளிக்குமாறு காசியாபாத் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அனுப்பப்பட்ட வீடியோவை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, தனது பேச்சு குறித்து விளக்கமளித்து யோகி ஆதித்யநாத் கடிதம் அனுப்பினார். எனினும், அந்த விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், எதிர்காலத்தில் யோகி ஆதித்யநாத் இதுபோன்ற பேசக் கூடாது. வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில் அவரது பேச்சுக்காக வேறு நடவடிக்கை எதையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் அக்.7 ஆம் தேதி தொடங்க உள்ளது.
2. வேலூரில் ரூ.2 கோடியே 38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - சத்யபிரத சாஹூ
வேலூரில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.
3. வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் இறுதி விசாரணை
வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோட்டில் இறுதி விசாரணை நடக்கிறது.
4. 9 மணிக்கு அலுவலகம் வரவில்லையென்றால் சம்பளம் ‘கட்’ யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு
அரசு அதிகாரிகள் 9 மணிக்கு அலுவலகம் வரவில்லையென்றால் சம்பளம் ‘கட்’ என யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
5. யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தியதாக கைதான பத்திரிகையாளருக்கு உடனடி ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தியதாக கைதான பத்திரிகையாளருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.