தேர்தல் செய்திகள்

நேர்மையான ஆட்சி வேண்டுமா? ஊழல் ஆட்சி வேண்டுமா? பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஆவேச பேச்சு + "||" + People have to choose between honest and corrupt govts: PM Modi attacks BJD in Odisha

நேர்மையான ஆட்சி வேண்டுமா? ஊழல் ஆட்சி வேண்டுமா? பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஆவேச பேச்சு

நேர்மையான ஆட்சி வேண்டுமா? ஊழல் ஆட்சி வேண்டுமா?  பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஆவேச பேச்சு
நேர்மையான ஆட்சி வேண்டுமா? ஊழல் ஆட்சி வேண்டுமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என ஒடிசா பிரச்சார கூட்டத்தில் பிரதமர் பேசினார்.
சுந்தர்கார்க்:

ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கார்க் பகுதியில், பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

ஒடிசா மாநிலத்தில் இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை மலரும் என்று நான் பெருமையுடம் சொல்வேன். அதேப்போல் மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி  வரும் என்பதில் சந்தேகம் இல்லை. பா.ஜ.க. நாட்டின் வலிமையான மற்றும் தீர்க்கமான கட்சியாகும்.

நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது.  மக்கள் நேர்மையான ஆட்சி வேண்டுமா அல்லது ஊழல் ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் நல்ல எதிர்காலத்தை உருவாக்கப்போகிறது.  தொண்டர்களின் கடுமையான உழைப்பிலும், வியர்வையிலும் உருவானது தான் இந்த பா.ஜ.க.வே தவிர, பணத்தினாலோ அல்லது வாரிசு முறையிலோ உருவாக்கப்படவில்லை. தற்போதும் தொண்டர்களின் வியர்வையினால் தான் வளர்ந்து வருகிறது.  எனவே தான் இன்று நாட்டில், மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பா.ஜ.க.  விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. “ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதி காங்கிரஸ் துரோகம் செய்கிறது” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதும் காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு பிறகு ஏழைகளுக்கு துரோகம் செய்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
2. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதி அளிக்கிறேன்- அமித்ஷா
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதி அளிக்கிறேன் என தூத்துக்குடியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
3. நாடாளுமன்ற தேர்தல்; 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
4. ஓரங்கட்டப்படும் பாரதீய ஜனதா தலைவர்கள்
நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று வரும், நாளை வரும் என எதிர்பார்க்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளிவந்திருக்கிறது. அதில் 184 பேரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
5. முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்