தேர்தல் செய்திகள்

மத்தியில்பா.ஜனதாவால் மட்டுமே வலிமையான அரசை அமைக்க முடியும்பிரதமர் மோடி பேச்சு + "||" + PM Modi talks

மத்தியில்பா.ஜனதாவால் மட்டுமே வலிமையான அரசை அமைக்க முடியும்பிரதமர் மோடி பேச்சு

மத்தியில்பா.ஜனதாவால் மட்டுமே வலிமையான அரசை அமைக்க முடியும்பிரதமர் மோடி பேச்சு
பா.ஜனதாவால் மட்டுமே மத்தியில் வலிமையான அரசை அமைக்க முடியும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சுந்தர்கர்,

ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. வருகிற 11-ந்தேதி முதல் 4 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க ஆளும் பிஜூ ஜனதாதளம் போராடி வருகிறது. அதேநேரம் ஒடிசாவில் இந்தமுறை ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிரமாக களமிறங்கி உள்ளது.

இதனால் பிரதமர் மோடி அடிக்கடி ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த 9 நாட்களில் 3-வது முறையாக மீண்டும் ஒடிசாவில் நேற்று பிரசாரம் செய்தார். ஒடிசாவின் மேற்கு பகுதியில் பழங்குடிகள் அதிகம் வாழும் சுந்தர்கரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் கூறியதாவது:-

பிரதான சேவகன்

சுந்தர்கர் பகுதிக்கு வந்த முதல் பிரதமராக நான் இருக்கிறேன். நான் இங்கு பிரதமராக வரவில்லை, மாறாக பிரதான சேவகனாக உங்கள் ஆசியை பெற வந்திருக்கிறேன். ஒடிசாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் இந்த தேர்தல் முக்கியமானது.

மத்தியில் கடந்த காலத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சியையும், ஒடிசாவில் கடந்த 19 ஆண்டுகளாக பிஜூ ஜனதாதளத்தின் ஆட்சியையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தற்போது ஒடிசா மக்களுக்கு ஒரு மாறுதல் தேவைப்படு கிறது.

முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான மாநில அரசு சோம்பல் மற்றும் ஊழல் நிறைந்திருப்பதுடன், வளர்ச்சியை நோக்கிய உண்மையான அக்கறை இல்லாமல் இருக்கிறது. இங்குள்ள பழங்குடி மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு பயன்படுத்தவில்லை. எனவே இத்தகைய அரசு தண்டிக்கப்பட வேண்டும். ஊழல் அரசா அல்லது நேர்மையான அரசா, நீங்களே தேர்ந் தெடுங்கள்.

நேர்மையான அரசு

கடந்த காலத்தில் இருந்த அரசுகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான துல்லிய தாக்குதல் குறித்து ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை. போர் விமானத்தில் எல்லை தாண்டி சென்று பயங்கரவாதிகளை ஒழிக்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை. மத்திய பா.ஜனதா அரசு அதை செய்து காட்டியிருக்கிறது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக காவலாளியாகிய நான் போராடுகிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஆயுதப்படைகளின் அதிகாரத்தை நீர்த்துப்போக செய்ய உழைக்கிறது. பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை பாதுகாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

நாட்டுக்கு நேர்மையான மற்றும் கொள்கை நிலைப்பாடு கொண்ட அரசு வேண்டுமா? அல்லது ஊழல் மற்றும் கொள்கையற்ற அரசு வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். பா.ஜனதாவால் மட்டுமே வலிமையான, தீர்க்கமான அரசை அமைக்க முடியும்.

தாமரை மலரும்

ஒடிசாவில் இந்த முறை தாமரை மலரும். பா.ஜனதா, வெற்றியை ருசிக்கும். மாநிலத்தில் ஏராளமான தாமரை மலரும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

பா.ஜனதாவின் 39-வது நிறுவனர் தினத்தில், கட்சியின் ஒவ்வொரு தொண்டரையும் நான் வணங்குகிறேன். பா.ஜனதாதான் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக அமைப்பு ஆகும். காங்கிரசுக்கும், மற்ற கட்சிகளுக்கும் நாங்கள்தான் வலிமையான மாற்றாக இருக்கிறோம். நாடு முழுவதும் பா.ஜனதாவின் கொடி பறக்கிறது. பா.ஜனதாவை மக்கள் தங்கள் இதயத்தில் வைத்துள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வறுமை ஒழிப்பு

பின்னர் சோன்பூரில் நடந்த மற்றொரு பிரசார கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி நாட்டின் வறுமையை ஒரு ஆயுதமாக கொண்டு எப்போதும் அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்து வருகிறது. காங்கிரஸ் இருக்கும் வரை வறுமை ஒழியாது. காங்கிரஸ் கட்சி அகற்றப்பட்டால் வறுமை தானாகவே ஒழிந்து விடும்’ என்று தெரிவித்தார்.

வறுமையை ஒழிப்போம் என தலைமுறை தலைமுறையாக வெறும் கோஷங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி வெளியிடுவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, ஏழைகள் மிகவும் ஏழையாகவும், காங்கிரஸ் தலைவர்களும், மந்திரிகளும் மிகவும் செல்வந்தர்களாகவும் மாறுவதாக தெரிவித்தார். இதை மாவோயிஸ்டுகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

டுவிட்டரில் தகவல்

முன்னதாக ஒடிசா புறப்படுவதற்கு முன் தனது டுவிட்டர் தளத்தில் மோடி கூறுகையில், ‘ஒடிசாவில் 2 பொதுக்கூட்டங்களில் உரையாற்ற இருக்கிறேன். ஒடிசாவில் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை கொடுக்கும். அங்கு அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்று பா.ஜனதா சாதனை படைக்கும். ஒடிசா மக்கள் காங்கிரசையும், பிஜூ ஜனதாதளத்தையும் நிராகரிப்பார்கள்’ என்று ஒடியா மொழியில் குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவின் கிரீடம் - பிரதமர் மோடி பேச்சு
காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமான நிலம் மட்டுமல்ல அவை இந்தியாவின் கிரீடம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2. இலங்கையில் தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன் -ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
இலங்கையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயத்தை பார்வையிட்ட போது தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.