தேர்தல் செய்திகள்

மேற்கு வங்காளத்தில் இருந்து போட்டியிட எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு மீண்டும் வாய்ப்பு + "||" + S S Ahluwalia again to contest from West Bengal

மேற்கு வங்காளத்தில் இருந்து போட்டியிட எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு மீண்டும் வாய்ப்பு

மேற்கு வங்காளத்தில் இருந்து போட்டியிட எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு மீண்டும் வாய்ப்பு
மேற்கு வங்காளத்தில் இருந்து போட்டியிட எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய மந்திரியாக இருப்பவர் எஸ்.எஸ். அலுவாலியா. இந்தமுறை அவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் அலுவாலியா அதே மாநிலத்தில் உள்ள துர்காபூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் பொதுசெயலாளர் ஜே.பி.நட்டா நேற்று அறிவித்தார்.


இதுகுறித்து அலுவாலியா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“இந்த தொகுதியில் என்னை போட்டியிட அனுமதித்த பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது இளமைக் காலத்தை துர்காபூரில்தான் கழித்தேன். இந்த தொகுதி எனக்கு நன்கு பழக்கப்பட்டதுதான். இங்கு வசிக்கும் மக்களுக்கு நான் சேவையாற்ற விரும்புகிறேன்”. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

பா.ஜனதா கட்சி சார்பில் இதுவரை 408 நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி திருச்சியில் தொடக்கம்
மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி திருச்சியில் தொடங்கியது.
2. அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது.
3. அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்தநாளையொட்டி குமரி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.
4. மேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலையில் முன்னேற்றம்
மேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5. மேற்கு வங்காள சட்டமன்ற கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மோதல் ; மம்தா பானர்ஜி சமாதானப்படுத்தினார்
மேற்கு வங்காள சட்டமன்ற கூட்டத்தில் காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதிக்கொண்டனர். அவர்களை முதல் மந்திரி மம்தா பானர்ஜி சமாதானப்படுத்தினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...