தேர்தல் செய்திகள்

பா.ஜனதாவின் ரூ.8 கோடியை பறிமுதல் செய்தது தெலுங்கானா போலீஸ் + "||" + Police seize Rs 8 crore cash belonging to BJPs Telangana unit

பா.ஜனதாவின் ரூ.8 கோடியை பறிமுதல் செய்தது தெலுங்கானா போலீஸ்

பா.ஜனதாவின் ரூ.8 கோடியை பறிமுதல் செய்தது தெலுங்கானா போலீஸ்
தெலுங்கானா பா.ஜனதாவின் 8 கோடி ரூபாயை அம்மாநில போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் எதையும் பின்பற்றப்படாமல் இந்த பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மாநில பா.ஜனதா இதனை மறுக்கிறது. தெலுங்கானா மாநில பா.ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ் பேசுகையில், “இதுபோன்ற நடவடிக்கைக்கு நாங்கள் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறோம். எந்தஒரு சட்டத்தையும் பா.ஜனதா மீறவில்லை, தேர்தல் ஆணைய விதிமுறையையும் மீறவில்லை,” என கூறியுள்ளார். 

தெலுங்கானா போலீசுக்கு கிடைத்த தகவலின்படி நாராயண்குடாவில் கார் ஒன்று வழிமறிக்கப்பட்டுள்ளது. அப்போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது சிக்கிய இருவர் இந்த பணம் பா.ஜனதா உதவியாளர் என கோபி வழங்கியது என தெரிவித்துள்ளனர். வங்கியில் அவரிடம் மேலும் அதிகமான பணம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து வங்கிக்கு போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அப்போது ரூ. 6 கோடியுடன் 4 பேருடன் நின்ற கோபியை கண்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 8 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் தரப்பில் உரிய ஆவணங்கள் எதுவும் தரப்படவில்லை, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 பேரிடம் இருந்து பறிமுதல் செய்த 8 கோடி ரூபாயை போலீஸ் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தது. நாங்கள் காசோலையின் வாயிலாகவே பணத்தை எடுத்தோம், அலுவலக செலவிற்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்தவே பணம் எடுத்தோம் என பா.ஜனதா கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பணம்-மதுபாட்டில்கள் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
2. பா.ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் - பிரதமர் மோடி பேச்சு
பாரதீய ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
3. பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணத்தை வட்டியுடன் வசூலிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ள பணத்தை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
4. பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கவர்னராக நியமிக்கிறார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு
பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கவர்னராக நியமிக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
5. தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.