தேர்தல் செய்திகள்

காங்கிரஸ் கட்சியே பா.ஜ.க. வளர்ச்சி அடைய காரணம் -மம்தா பானர்ஜி + "||" + Modi baptized in politics through riots, killings: Mamata

காங்கிரஸ் கட்சியே பா.ஜ.க. வளர்ச்சி அடைய காரணம் -மம்தா பானர்ஜி

காங்கிரஸ் கட்சியே பா.ஜ.க. வளர்ச்சி அடைய காரணம் -மம்தா பானர்ஜி
காங்கிரஸ் கட்சியே பா.ஜ.க. வளர்ச்சி அடைய காரணம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ராய்கஞ்ச்,

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி ராய்கஞ்ச் நகரில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது, பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமையாக போராட காங்கிரஸ் கட்சி தவறி விட்டது. இதனால் காவி  கட்சியானது வளர்ச்சி அடைய வழிவகை ஏற்பட்டு விட்டது.

அரசியலில் வன்முறை மற்றும் படுகொலைகளால் அறியப்பட்டவர் பிரதமர் மோடி. அவர் பாசிசத்தின் அரசன். சர்வாதிகாரி ஹிட்லர் உயிருடன்  இருந்திருப்பாரேயானால் மோடியின் செயல்பாடுகளை கவனித்து தற்கொலை செய்து கொண்டிருப்பார் என கூறினார்.

காங்கிரஸ் கட்சியானது மத்தியில் தனியாக அரசை அமைக்க முடியாது.  பா.ஜ.க.வுக்கு எதிராக நம்பகத்தன்மையுடன் போராட அக்கட்சி தவறி விட்டது.  இதனால் பா.ஜ.க. அதிக பலம் பெற்ற கட்சியாக வளர்ந்து விட்டது.

ராகுல் காந்தி தலைமையிலான கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க விரும்பினால் மற்றவர்களின் ஆதரவை அவர்கள் கோர வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மோடியை தூக்கியெறிவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மோடி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின் புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணியில் நாம் இணைந்து பணியாற்றுவோம் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு - மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றுவது குறித்து பேச்சு
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்தார். மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றுவது குறித்து பேசினார்.
2. பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென்னை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
3. பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து ; சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்
பிரதமர் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
4. ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் - உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை
ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் என்று உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.