விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பெற்று தருவது தான் எங்களுடைய நோக்கம் - முதல்வர் பழனிசாமி

விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பெற்று தருவது தான் எங்களுடைய நோக்கம் என முசிறியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை
முசிறியில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்யும் போது கூறியதாவது:-
விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பெற்று தருவது தான் எங்களுடைய நோக்கம். அ.தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்ற உடன் முதல் கோரிக்கை, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு தான்.
குடிமராமத்து மூலம் 3 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது; மீதமுள்ள ஏரிகளும் தூர்வாரப்படும். தற்போது 3 தடுப்பணைகள் கட்டும் பணி துவக்கம்; தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்,
இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் எத்தனை தடுப்பணைகள் கட்ட முடியுமோ, அத்தனை தடுப்பணைகள் கட்டப்படும்
கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் வந்தே தீர வேண்டும். காவிரி -கோதாவரி இணைப்பு திட்டம் தான் மக்களவையில் முதல் குரலாக ஒலிக்கும் என கூறினார்.
Related Tags :
Next Story






