தேர்தல் செய்திகள்

நீட் தேர்வை நிச்சயம் காங்கிரஸ் ரத்து செய்யும்; குஷ்பு பேட்டி + "||" + Congress will undoubtedly cancel the NEET Exam; Interview with Khushboo

நீட் தேர்வை நிச்சயம் காங்கிரஸ் ரத்து செய்யும்; குஷ்பு பேட்டி

நீட் தேர்வை நிச்சயம் காங்கிரஸ் ரத்து செய்யும்; குஷ்பு பேட்டி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ரத்து செய்யும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலை அடுத்து அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  தமிழகத்தில் வருகிற 18ந்தேதி தேர்தல் நடைபெறும்.  வாக்கு எண்ணிக்கை 23ந்தேதி நடைபெறும்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிரசாரத்துக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சி செய்ய முடிவதை தான் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கும்.

இதற்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் சாத்தியமா? என கேள்வி எழுப்பியவர்கள், தற்போது நியாய் திட்டம் குறித்து கேள்வி எழுப்புவதாக பா.ஜ.க.வை சாடியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி நிறைவேறும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கால அட்டவணை வெளியீடு: டிசம்பர் 2-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
2. மே 3-ம் தேதி 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு
2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
3. நிராகரித்ததற்கு காரணம் கேட்டு ‘நீட்’ தேர்வு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது: ஐகோர்ட்டில், அட்வகேட் ஜெனரல் வாதம்
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதாக்களை நிராகரித்ததற்கான காரணம் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு 11 கடிதங்கள் அனுப்பி உள்ளதாக ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் கூறினார்.
4. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - த.மு.மு.க.வினர் 48 பேர் கைது
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, காரைக்காலில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்த, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் (த.மு.மு.க.) 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து தஞ்சை பெரியகோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தஞ்சை பெரியகோவில் மற்றும் பா.ஜ.க. அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.