தேர்தல் செய்திகள்

ஆந்திரா: அமராவதியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு + "||" + Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu and his family after casting their vote for #LokSabhaElections2019 in Amravati.

ஆந்திரா: அமராவதியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா: அமராவதியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு
அமராவதியில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
அமராவதி, 

ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய  வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்து விடும்.

ஆந்திராவில் வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அமராவதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார். தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து சந்திரபாபு நாயுடு வாக்களித்தார்.  ஆந்திராவில் ஆளும்  தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் துப்பாக்கி சண்டை: 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் பலி
ஆந்திராவில் நடந்த துப்பாக்கி சண்டையில், 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் பலியாகினர்.
2. ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.
3. ஆந்திராவில் படகு விபத்து - உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
ஆந்திராவில் படகு விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
4. ஆந்திர பிரதேசம்: பைக் திருட்டு கும்பல் கைது, 130 வாகனங்கள் மீட்பு
ஆந்திர பிரதேசத்தில் நீண்ட காலமாக பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
5. தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு
தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.