ஆந்திர பிரதேசம்: சில இடங்களில் நள்ளிரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சில இடங்களில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது.
அமராவதி,
17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல், ஆந்திரா (25), அருணாசலபிரதேசம் (2), அசாம் (5), பீகார் (4), சத்தீஷ்கார் (1), காஷ்மீர் (2), மராட்டியம் (7), மணிப்பூர் (1), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1), ஒடிசா (4), சிக்கிம் (1), தெலுங்கானா (17), திரிபுரா (1), உத்தரபிரதேசம் (8), உத்தரகாண்ட்(5), மேற்கு வங்காளம் (2), லட்சத்தீவுகள் (1), அந்தமான் நிகோபார் தீவுகள் (1) என 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் நடந்தது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு அம்மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆந்திராவில் சில இடங்களில் வன்முறை நடைபெற்ற போதிலும் கிட்டதட்ட 80 சதவீத வாக்குகள் பதிவாகின.
குந்துர், கிருஷ்ணா, நெல்லூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்குள் வாக்களிக்க வந்து காத்திருந்த அனைத்து வாக்காளர்களையும் ஓட்டுப்பதிவு செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர். இயந்திரக்கோளாறு, மோதல் ஆகியவற்றால் 400 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதம் ஆனது.
Related Tags :
Next Story






