சென்னை, நாமக்கல், திருநெல்வேலி உட்பட தமிழகத்தில் 18 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை


சென்னை, நாமக்கல், திருநெல்வேலி உட்பட தமிழகத்தில் 18 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 12 April 2019 11:04 AM IST (Updated: 12 April 2019 1:11 PM IST)
t-max-icont-min-icon

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி உட்பட தமிழகத்தில் 18 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னை

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில் பலகோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது.

இதேபோல் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை மற்றும் நாமக்கல்லில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 இடங்களிலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் சென்னையில் 11 இடங்களிலும், நெல்லையிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story