தேர்தல் செய்திகள்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் சரத்குமார் பேட்டி + "||" + Sarath Kumar interviewed MK Stalin's dream

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் சரத்குமார் பேட்டி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் சரத்குமார் பேட்டி
தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என மு.க.ஸ்டாலின் கனவு காண்பதாக சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
கன்னியாகுமரி, 

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட தயாராகி விட்டார்கள். இந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பல கட்சிகளுக்கு பல கருத்துகள் இருந்தாலும் மத்தியில் நிலையான பெரும்பான்மை பலமுள்ள ஆட்சி மோடி தலைமையில் வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மக்கள் உள்ளனர். மோடி மீண்டும் பிரதமராவது உறுதி.

மோடி தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பல திட்டங்களை நிறைவேற்றினார்.

முதல்-அமைச்சராக முடியாது

கன்னியாகுமரி தொகுதியில் 5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பாக பணியாற்றினார். இந்த தொகுதி நல்ல வளர்ச்சி பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது. நல்ல அரசியல்வாதியான இவர் மீண்டும் வெற்றி பெற வேண்டும். வருமான வரிசோதனை எதிர்க்கட்சிகளை குறி வைத்து நடப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. இதில் சூழ்ச்சி, சதி எதுவும் கிடையாது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அவர்கள் சோதனை நடத்துகிறார்கள். முன்பு என்னிடமும் வருமான வரி சோதனை நடந்துள்ளது.

தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும், நாம் முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரால் எந்த காலத்திலும் தமிழக முதல்-அமைச்சராக வர முடியாது. அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் ஸ்டாலினிடம் உள்ளது. அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் எப்படி ஆட்சிக்கு வரமுடியும். சட்டசபை இடைத்தேர்தலிலும் எங்கள் ஆதரவு அ.தி.மு.க. கூட்டணிக்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பிரசாரம்

தொடர்ந்து, குலசேகரம் சந்தை சந்திப்பில் பா.ஜனதா வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணனை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்தார்.