தேர்தல் செய்திகள்

மீண்டும் பிரதமரானவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்க மோடி உத்தரவு + "||" + Lok Sabha elections 2019: Ahead of poll results, PM Narendra Modi directs officials to prepare 100-day agenda

மீண்டும் பிரதமரானவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்க மோடி உத்தரவு

மீண்டும் பிரதமரானவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்க மோடி உத்தரவு
மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் செயல்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு, பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், அறிவியல் ஆலோசகருக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி

முதல் கட்ட மக்களவை தேர்தல் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. இன்னும் 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து, மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தான் மீண்டும் பிரதமராவது உறுதி என்ற திடமான நம்பிக்கையில் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றவுடன் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டியவற்றிற்கு மோடி திட்டமிட்டு வருகிறார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டுவதை மையப்படுத்தி செயல் திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் மற்றும் அறிவியல் துறை முதன்மை ஆலோசகருக்கு மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வாரணாசியில் ஆதரவாளர்களுடன் ஆறு கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்ற பிரதமர் மோடி
பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று மெகா பேரணி நடந்தது.
2. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #PMmodi #LokSabhaElections2019
3. பிரதமர் ஆவேன் என்று நான் நினைத்ததே இல்லை : அக்‌ஷய் குமாரிடம் மனம் திறந்த மோடி
பிரதமராக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை என்று அக்‌ஷய் குமாருடனான கலந்துரையாடலில் மோடி தெரிவித்துள்ளார்.
4. மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: தனது வாக்கை பதிவு செய்த பின் பிரதமர் மோடி பேட்டி
மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. மக்களவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.