தேர்தல் செய்திகள்

சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை + "||" + EC bars Samajwadi Party leader Azam Khan from election campaigning for 72 hours

சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
லக்னோ, 

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக உள்ளார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

அவருக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.  ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தனக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் போட்டியில் இருந்து விலக தயார் எனவும் யாரையும் பெயர் குறிப்பிட்டு தான் பேசவில்லை எனவும் ஆசம்கான் தெரிவித்தார்.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என கூறி அவர் 72 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  இதன்படி அவர் நாளை காலை 10 மணி முதல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே? தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்
எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே? தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
2. மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தற்காலிக தடை : அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
அகதிகள் வருகையை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் கட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு செய்தார். இதற்கான நிதியை ஒதுக்கும்படி நாடாளுமன்றத்திடம் அவர் கோரிக்கை வைத்தபோது, ஜனநாயக கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
3. தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதமாகும் -தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
4. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது; புகார் மனு அளித்த பின் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக பேட்டி
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக கூறினர்.
5. பா.ஜனதாவின் கைப்பொம்மையான தேர்தல் ஆணையம் வைகோ குற்றச்சாட்டு
பா.ஜனதா கட்சியின் கைப்பொம்மையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று வைகோ குற்றம்சாட்டினார்.