தேர்தல் செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினருடன் மோதல்: காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா போலீஸ் பாதுகாப்பு கேட்டார் + "||" + Confrontation with BJP in Election Campaign: Congress candidate actress Urmila asked for police protection

தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினருடன் மோதல்: காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா போலீஸ் பாதுகாப்பு கேட்டார்

தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினருடன் மோதல்: காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா போலீஸ் பாதுகாப்பு கேட்டார்
தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா போலீஸ் பாதுகாப்பு கேட்டார்.
மும்பை,

நடிகை ஊர்மிளா மடோங்கர் பிரசாரத்தில் காங்கிரஸ்-பா.ஜனதா கட்சி தொண்டர்கள் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்த ஊர்மிளா மடோங்கர் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கோரினார்.


நாடாளுமன்ற தேர்தலில் வட மும்பை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர் போட்டியிடுகிறார். இவர் தனது கட்சி தொண்டர்களுடன் நேற்று போரிவிலி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் போரிவிலி ரெயில் நிலையம் அருகே வந்தபோது அங்கு பிரசாரத்துக்காக திரண்டு இருந்த பா.ஜனதா தொண்டர்கள் ‘மோடி, மோடி’ என கோஷம் போட்டனர்.

இதனால் நடிகை ஊர்மிளா மடோங்கர் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள், பா.ஜனதாவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுக்கிதார் சோர்(காவலாளி திருடன்) என கோஷம் போட்டனர்.

உடனே ஆத்திரம் அடைந்த பா.ஜனதா தொண்டர்கள் சிலர், காங்கிரசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுக்கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவத்தை தொடர்ந்து ஊர்மிளா மடோங்கர், போரிவிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் தங்களது பிரசார ஊர்வலத்தில் புகுந்து ரகளை செய்ததாகவும், இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்றும் தெரிவித்தார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மயிலம் அருகே, சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல், பதற்றம்-போலீஸ் குவிப்பு
மயிலம் அருகே சாமி ஊர்வலத்தின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அரசின் பதவி காலம் முடிகிறது - சட்டசபை தேர்தல் தேதி வெளியாகிறது
கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் மராட்டிய சட்டசபை தேர்தல் தேதி ஆனந்த சதுர்த்திக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
3. பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் சாவு - ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். இதனால் ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
4. கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை - மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி
கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை என்று திருப்பூரில் அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.
5. புவனகிரியில் பரபரப்பு, விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் - 5 பேர் கைது
புவனகிரியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.