தேர்தல் செய்திகள்

சேலத்தில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் பழனிசாமி + "||" + In Salem Walk on the street street Votes were collected Chief Minister Palanisamy

சேலத்தில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் பழனிசாமி

சேலத்தில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்து சென்றபடியே சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
சேலம்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 22-ந் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார்.

கடந்த 25 நாட்களாக தமிழகம் முழுவதும் வாகனத்தில் நின்றபடியும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஏற்கனவே சேலம் நெய்க்காரப்பட்டியில் நடந்த சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அவர் கடந்த 14-ந் தேதி கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று கே.ஆர்.எஸ். சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதால் சேலத்தில் தங்கி உள்ள எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை சேலத்திலேயே முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்து சென்றபடியே சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தார். கடை வீதியில் ஓட்டு சேகரித்தார். அவர் அண்ணா சிலை அருகே பிரசாரம் மேற்கொண்டார்.

பிற்பகலில் திருச்சி மெயின் ரோட்டில் ஜவுளிக்கடை பஸ் நிறுத்தத்தில் தொடங்கி சீலநாயக்கன்பட்டி வரை நடந்து சென்று அவர் வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதையொட்டி அவர் பிரசாரம் செய்யும் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த பாராளுமன்ற தேர்தலில், திமுக தனது மூன்று கூட்டணி கட்சிகளுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கியது!
கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகள் மூன்றுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கி உள்ளது என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.