தேர்தல் செய்திகள்

கரூரில் அதிமுக - திமுக இடையே மோதலால் பதற்றம்! போலீஸ் குவிப்பு + "||" + Clash between ADMK DMK workers in karur

கரூரில் அதிமுக - திமுக இடையே மோதலால் பதற்றம்! போலீஸ் குவிப்பு

கரூரில் அதிமுக - திமுக இடையே மோதலால் பதற்றம்! போலீஸ் குவிப்பு
கரூர் வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது திமுக - அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துள்ளது.

கரூர் வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெற்றது. பிரசாரம் மேற்கொண்ட திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோதல் போக்கு நேரிட்டுள்ளது. இதனையடுத்து கரூர் பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக - காங்கிரஸ் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை துணை ராணுவம் மற்றும் காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே கரூர் வேட்பாளர் ஜோதிமணி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் "கரூர் தொகுதியில் நடந்து கொண்டிருப்பது இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரமல்ல. யுத்தம்! நமது இறுதிக்கட்ட பிரசாரம் திட்டமிட்டபடி மாலை 4- 6 மணிவரை பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நடைபெறும். இதற்கான நீதிமன்ற உத்திரவினைப் பெற்றிருக்கிறோம். அதிகாரத்தை விட,அராஜகத்தை விட உண்மை வலிமையானது" என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இடைத் தேர்தலில் விருப்பமனு அளித்தவர்களிடம் திங்கள்கிழமை நேர்காணல் - அதிமுக
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் விருப்பமனு அளித்தவர்களிடம் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.
2. மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டி - சரத்பவார் அறிவிப்பு
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று சரத்பவார் அறிவித்து உள்ளார்.
3. மராட்டிய சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டி
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று சரத்பவார் தெரிவித்து உள்ளார்.
4. பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது : திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
பேனர் வைப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
5. ”ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அதிகம் வாசிக்கப்பட்டவை