தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு; சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி


தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு; சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
x
தினத்தந்தி 16 April 2019 11:21 AM GMT (Updated: 16 April 2019 11:21 AM GMT)

தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களான கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், தேர்தல் பிரசாரத்தின்பொழுது, ஆரத்தி எடுக்கும்பொழுது கனிமொழி தரப்பில் பணம் தந்தனர் என புகார் உள்ளது.  இதேபோன்று வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கதிர் ஆனந்திற்கு உரிய பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் சிக்கின என புகார் உள்ளது.

இதனால் அவர்கள் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Next Story