தேர்தல் செய்திகள்

மதத்தின் அடிப்படையில் காங்கிரசை சேர்ந்த சித்து பிரசாரம் + "||" + Navjot Sidhu appeals to Muslims to vote for Congress to defeat PM Modi

மதத்தின் அடிப்படையில் காங்கிரசை சேர்ந்த சித்து பிரசாரம்

மதத்தின் அடிப்படையில் காங்கிரசை சேர்ந்த சித்து பிரசாரம்
பிரதமர் மோடியை தோற்கடிக்க இஸ்லாமியர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரசை சேர்ந்த சித்து பேசியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக யோகி ஆதித்யநாத், மாயாவதி, அசாம் கான், மேனகா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து, பிரதமர் மோடியை தோற்கடிக்க இஸ்லாமியர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். 

பீகார் மாநிலம் கதிகாரில் பிரசாரம் செய்ய சித்து, நீங்கள் உங்களை சிறுபான்மையினர் என பார்க்காதீர்கள். இங்கு நீங்கள் மெஜாரிட்டியாகவே உள்ளீர்கள். 64 சதவீதத்திற்கு மேல் உள்ளீர்கள். ஓவைசி போன்றவர்களின் பேச்சுக்கு அடிபணியாதீர்கள். அவர்கள் எல்லாம் பா.ஜனதாவால் தூண்டப்பட்டவர்கள் என கூறியுள்ளார். 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜனதா, கண்டிக்கத்தக்க செயல் தொடர்பாக தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஐநா கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
2. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
வெளிநாட்டை சேர்ந்த 5 குடும்பங்களையாவது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு சுற்றுலாவாக அனுப்பி வைக்குமாறு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3. ஹூஸ்டன் நிகழ்ச்சி, என் நினைவை விட்டு அகலாது; இந்தியாவின் உற்ற நண்பர் டிரம்ப் - பிரதமர் மோடி கருத்து
ஹூஸ்டன் நிகழ்ச்சி, என் நினைவை விட்டு அகலாது. இந்தியாவின் உற்ற நண்பராக டிரம்ப் திகழ்கிறார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. மரபுசாரா மின் உற்பத்தியை 4 லட்சம் மெகாவாட்டாக உயர்த்துவோம்; உலக பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவின் மரபுசாரா மின் உற்பத்தியை 4 லட்சம் மெகாவாட் அளவுக்கு உயர்த்துவோம் என்று உலக பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார்.
5. பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையையொட்டி புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம் சாலை, மின்விளக்குகள் புதுப்பிப்பு
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் வருகை தருவதையொட்டி மாமல்லபுரம் நகரத்தில் சாலை, மின்விளக்குகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.