தேர்தல் செய்திகள்

பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை + "||" + Because I am a backward PM Modi’s counter to Rahul Gandhi jibe over name

பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை

பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை
பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

ரபேல் விவகாரத்தில் காவலாளிதான் திருடன் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். எனவே, அவருக்கு பதிலடியாக, ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரசாரத்தை நடத்துமாறு பா.ஜனதாவினருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, அவர் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்று சேர்த்துக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில் பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

மராட்டியத்தில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து பேசுகிறார்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் இந்த சமுதாயத்தில் உள்ள எல்லா மோடிகளும் திருடர்கள் என்று சொல்கிறார்கள்.  என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரே இனத்தையே களங்கப்படுத்துகிறார்கள். அவர்களது பேச்சு எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. 

இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன். அதனால் வாரிசுதாரர்கள் என்னை பார்த்து கேலி செய்கிறார்கள். நான் காவலாளி என்றால் திருடன் என்கிறார்கள். உண்மையில் இந்த நாட்டை திருட நினைப்பவர்களுக்கு நான் காவலாளிதான். இதனால் அவர்களது கோ‌ஷம் என்னையும் தாண்டி என் சமுதாயத்தின் மீதும் பாய்ந்துள்ளது என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை’ பிரதமர் மோடி எச்சரிக்கை
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
2. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லிம் என்று பார்ப்பதா? -பிரதமர் மோடி கண்டனம்
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு விஷயத்தில் இந்து-முஸ்லீம் என பார்ப்பதா என்று காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு
ஒரு குடும்பத்தை போற்றுவதையே காங்கிரஸ் கட்சி தேசபக்தியாக பார்ப்பதாக பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
4. நரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக செயல்பட்டால் 1+1 என்பது 11 ஆக இருக்கும்; பிரதமர் மோடி பேச்சு
நரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக இணைந்து செயல்பட்டால் 1+1 என்பது 2 அல்ல 11 ஆக இருக்கும் என பிரதமர் மோடி மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
5. சிவாஜி ஆட்சி செய்த நிலத்தில் அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவது அதிர்ச்சி அளிக்கிறது பிரதமர் மோடி
சிவாஜி ஆட்சி செய்த நிலத்தில் அரசியல் லாபங்களுக்காக எதிர்க் கட்சிகள் குரல் எழுப்புவது அதிர்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.