தேர்தல் செய்திகள்

மக்களவை தேர்தல்: 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது + "||" + Elections 2019: Voting Begins In 95 Seats Across 11 States In Second Phase - 10 Points

மக்களவை தேர்தல்: 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவை தேர்தல்: 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில்  வாக்குப்பதிவு தொடங்கியது
12 மாநிலங்களில் 95 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கிறது
சென்னை,

முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. 


எனவே இன்று 12 மாநிலங்களில் உள்ள  95 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அவை விவரம் வருமாறு:-தமிழ்நாட்டில் 38, புதுச்சேரியில் 1, கர்நாடகத்தில் 14, மராட்டியத்தில் 10, உத்தரபிரதேசத்தில் 8, அசாம், பீகார், ஒடிசாவில் தலா 5, சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூரில் ஒரு தொகுதி என மொத்தம் 95 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு
15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருப்பதன் மூலம் மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
2. வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு:இன்று மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை
வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரி வழக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது - தேர்தல் ஆணையம்
பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
5. தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவாலாக உள்ளது- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவாலாக உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.