தேர்தல் செய்திகள்

இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார் + "||" + Expelled Bangladeshi actor apologises for campaigning for Indian elections

இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்

இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்
இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டதால் வெளியேற்றப்பட்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்.

வங்காளதேச நடிகர் பெர்டோஸ் அகமது மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவருடைய விசாவை ரத்து செய்த இந்திய உள்துறை அமைச்சகம், அவரை கருப்பு பட்டியலிலும் இணைத்தது. விசா விதிமுறைகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து வங்காளதேச நடிகர் பெர்டோஸ் அகமது இந்தியாவைவிட்டு வெளியேறினார். 

இப்போது மேற்கு வங்காளத்தில் பிரசாரம் செய்ததற்கு பெர்டோஸ் அகமது மன்னிப்பு கோரியுள்ளார். 

பிறநாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது தவறானது என புரிந்து கொண்டேன். தெரியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரிக்கொள்கிறேன். என்னை எல்லோரும் மன்னிப்பார்கள் என நம்புகிறேன் என பெர்டோஸ் அகமது கூறியுள்ளார் என வங்காளதேச செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. எப்-16 போர் விமானங்களை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி உள்ள பாகிஸ்தான்
பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எப்-16 போர் விமானங்களை எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது.
2. 102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில் 37-வது தடவையாக ஓட்டு போட்டார்
இமாசலபிரதேசத்தை சேர்ந்த 102 வயதான இந்தியாவின் முதல் வாக்காளர் தேர்தலில், 37-வது தடவையாக ஓட்டு போட்டார்.
3. நாடு முழுவதும் 7 வது கட்ட வாக்குப்பதிவு முடிந்தது, 60.21 சதவீத வாக்குகள் பதிவு
நாடு முழுவதும் 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.
4. சொந்த மண்ணில் சோபிக்க தவறிய இந்தியா (1987)
1987-ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
5. தீவிரவாதத்துக்கு எதிராக எடுத்த முயற்சிகள் என்ன? பாகிஸ்தானுக்கு இந்தியா சரமாரி கேள்வி: சீன மாநாட்டில் பரபரப்பு
தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரம் மற்றும் நிதி மோசடி நடவடிக்கைகளை தடுக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சீனாவில் நடந்த ஆசியா பசிபிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.