தேர்தல் செய்திகள்

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு + "||" + In Tamilnadu it is 63.73 per cent voting for 5 clock

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி  63.73 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
சென்னை,

17 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக  நடந்து வருகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

வாக்குப்பதிவு விபரங்களை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. காலை 9 மணிக்கு 13 சதவீதமும், காலை 11 மணிக்கு 30.62 சதவீதமும் பதிவாகி இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.49 சதவீத ஓட்டு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

3 மணி நிலவரப்படி  52.02 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. கரூரில் அதிகபட்சமாக 56. 85 சதவீதமும், மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 45.65 சதவீதமும்,  சட்டசபை இடைத்தேர்தலில் 55. 97 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது என கூறினார்.

5 மணி வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது:-

5 மணி நிலவரப்படி  63.73 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக   சிதம்பரத்தில் 70.73 சதவீதமும், குறைந்தபட்சமாக  கன்னியாகுமரியில் 55.07 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது.  சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்குஎண்ணும் மையத்தில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு
சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்குஎண்ணும் மையத்தில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
2. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது; புகார் மனு அளித்த பின் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக பேட்டி
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக கூறினர்.
3. மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது -தலைமை தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவை சேர்த்து மொத்தம் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
4. வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு
வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
5. பாராளுமன்ற தேர்தல் 2019: உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியில் 143% வாக்குப்பதிவு
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தாஷிகேங் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே உயரமானது என்று அறியப்பட்ட நிலையில், தேர்தலில் அங்கு விநோதமாக 143 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை