தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தர்மபுரியில் 75.71 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56.41 சதவீதமாகவும் வாக்குகள் பதிவாகி உள்ளன. 18 சட்டசபை தொகுதிகளில் 75.71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இடைத்தேர்தலில் அதிகபட்சமாக சோளிங்கரில் 82.26 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக பெரம்பூரில் 64.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்கள் பலமுறை நடத்தப்பட்டு உள்ளன. பெயர் விடுபட்டது தொடர்பான புகார்கள் விசாரிக்கப்படும். வாக்குகள் குறைவு குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை என கூறினார்.
Related Tags :
Next Story






