தேர்தல் செய்திகள்

பொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது; பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் -வைகோ + "||" + Ponnaravaravi area The turmoil has occurred; General peace should be established Vaiko

பொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது; பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் -வைகோ

பொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது; பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் -வைகோ
பொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வைகோ கூறினார்.
சென்னை,

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலின்போது மதிமுகவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன்.

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதே எங்கள் கணிப்பு. 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஈடுபாடோடு தேர்தல் பணி ஆற்ற உள்ளோம் .

பொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமான இருவரை கைது செய்ய வேண்டும். பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என கூறினார்.