தேர்தல் செய்திகள்

பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை + "||" + ECI bans web series on PM Modi, titled, 'Modi - Journey of a common man'

பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை

பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய மோடி, குடிமகனின் பயணம் என்ற வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்து உள்ளது.
புதுடெல்லி,

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  முதல் மற்றும் 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்து உள்ளது.  தொடர்ந்து பிற தொகுதிகளுக்கான தேர்தலுக்காக கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.  தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி என்ற பெயரில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாக இருந்தது.  இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.  இந்நிலையில், மோடி, ஒரு குடிமகனின் பயணம் என்ற தலைப்பிலான வலைதள தொடர் ஒன்றுக்கும் தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்து உள்ளது.

இந்த உத்தரவில், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும்பொழுது, எந்தவொரு அரசியல் அல்லது தனிநபருடன் தொடர்புடைய வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட காட்சிகள், தேர்தலில் இடையூறு ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட விசயங்கள் எதுவும், மின்னணு ஊடகம் உள்ளிட்டவற்றில் திரையிடப்பட கூடாது.

ஆணையத்தின் இந்த உத்தரவின்படி, நடப்பு மக்களவை தேர்தலில் ஓர் அரசியல் தலைவராக, பிரதமராக, நரேந்திர மோடி பற்றிய இந்த வலைதள தொடரில் உள்ள உண்மைகள் மற்றும் விசயங்களை கவனத்தில் கொண்டு இதற்கு தடை விதிக்கப்படுகிறது என ஆணையம் தெரிவித்து உள்ளது.  இந்த தடையானது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதற்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.  தேர்தல் ஆணையம் படத்தினை பார்த்து விட்டு பதில் தெரிவிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 22ந்தேதிக்கு  ஒத்தி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தேச துரோக வழக்கில் ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை- டெல்லி நீதிமன்றம் உத்தரவு
தேச துரோக வழக்கில் டெல்லி மாணவி ஷீலா ரஷீதை கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. தி.மு.க. தடைகேட்டு தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றால் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு தயார் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
தி.மு.க. தடைகேட்டு தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றால் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
3. நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி; ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க விதித்த தடையையும் மதுரை ஐகோர்ட்டு நீக்கியது
நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தும், இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க விதித்த தடையை நீக்கியும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4. பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்தாப் ஆலத்துக்கு ஒரு ஆண்டு தடை
வேகப்பந்து வீச்சாளர் அப்தாப் ஆலம் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு முன்னதாக சவுதம்டனில் உள்ள ஓட்டலில் தங்கி இருக்கையில் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது.
5. தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரி வழக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.