தேர்தல் செய்திகள்

ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி + "||" + Independent candidates raise questions about Rahul's citizenship, educational qualification; decision on Apr 22

ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி

ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி
ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமேதி,

நாடாளுமன்ற மக்களவைக்கான அமேதி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.  இதனுடன் கேரளாவின் வயநாட்டிலும் அவர் போட்டியிடுகின்றார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆர்.கே. சிங் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்திருக்கிறேன் என கூறி கொள்ளும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்நாட்டில் வருமான வரி தாக்கல் செய்கிறார்.

அரசியல் சாசனத்தின் ஷரத்து 19ன் கீழ் மற்றும் இந்திய குடியுரிமை சட்டத்தின் பிரிவு 9ன்படி, ராகுல் காந்தி இந்திய குடிமகன் என்ற தகுதியை இழக்கிறார்.  இதனால் அவரது மக்களவை உறுப்பினர் அந்தஸ்தும் பறிக்கப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.  

இதுபற்றி மத்திய அரசை அணுகும்படி சிங்கிடம் நீதிமன்றம் கேட்டு கொண்டது.  சட்டப்படியான சிங்கின் கேள்விக்கு, மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் அமேதி தொகுதியில் சுயேச்சைகளாக போட்டியிடும் துருப்லால், அப்சல், சுரேஷ் சந்திரா மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் ராகுல் காந்தியின் குடியுரிமை, கல்வி தகுதி பற்றி வேட்பு மனு பரிசீலனையின்பொழுது, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.  இதற்கு தேவையான ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.  ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் கவுசிக், இதற்கு பதிலளிக்க காலஅவகாசம் கேட்ட நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி ராம் மனோகர் மிஷ்ரா வருகிற 22ந்தேதி காலை 10.30 மணியளவில் இந்த விவகாரம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
2. ராகுல் காந்தியின் எதிர்மறை பிரசாரம் எடுபடவில்லை: தோல்வி குறித்து காங். நிர்வாகிகள் புலம்பல்
ராகுல் காந்தியின் எதிர்மறை பிரசாரம் எடுபடவில்லை என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
3. ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்க காங்.காரிய கமிட்டி நிர்வாகிகள் மறுப்பு என தகவல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
4. ராகுல் காந்தி கட்சி தலைவராக நீடிப்பார்; காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
5. தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை: காங்கிரஸ் விளக்கம்
தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.