தேர்தல் செய்திகள்

பிரதமர் மோடியை முஸ்லிம் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் + "||" + EC notice to Sidhu for asking Muslims to vote to defeat Modi

பிரதமர் மோடியை முஸ்லிம் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் மோடியை முஸ்லிம் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் மோடியை முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டும் என பேசிய சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,

முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான நவ்ஜோத் சிங் சித்து பீகாரில் நடந்த பேரணி ஒன்றில் பேசும்பொழுது, சிறுபான்மை சமூக மக்களான முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என கூறினார்.

இதனால் அவருக்கு எதிராக சமீபத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.  தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அதனை சித்து மீறியுள்ளார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இது தவிர்த்து அரசியல் பிரசாரங்களில் மத விசயங்களை பேசுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஒன்றில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து சித்துவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  அதில் 24 மணிநேரத்தில் சித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதமாகும் -தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது; புகார் மனு அளித்த பின் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக பேட்டி
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக கூறினர்.
3. பா.ஜனதாவின் கைப்பொம்மையான தேர்தல் ஆணையம் வைகோ குற்றச்சாட்டு
பா.ஜனதா கட்சியின் கைப்பொம்மையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று வைகோ குற்றம்சாட்டினார்.
4. மேற்கு வங்காளத்தில் வன்முறை: பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம்
மேற்கு வங்காளத்தில் வன்முறையை அடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
5. அமித்ஷாவின் பொதுக்கூட்டத்துக்கு மே.வங்க அரசு தடை: தேர்தல் ஆணையத்தில் முறையிட பாஜக திட்டம்
மேற்கு வங்காளத்தில் அமித்ஷாவின் பொதுக்கூட்டத்துக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.