தேர்தல் செய்திகள்

மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம் + "||" + The woman who entered the room with ballot papers in Madurai suspended

மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்

மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம்
மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
மதுரை,

மதுரை மக்களவை தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில்  வைக்கப்பட்டது. இதற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அறை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்து சில ஆவணங்களை நகல் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் பரவியதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என கூறினார்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

அறைக்குள் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதன்பின் வாக்குப்பதிவு ஆவண அறையில் நுழைந்ததாக கலால் வட்டாட்சியர் சம்பூர்ணத்திடம், மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார்.  அவர் 2 மணிநேரம் ஆவண அறையில் இருந்துள்ளார்.  ஆனால், வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறைக்குள் நுழையவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கயத்தாறில் பரிதாபம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை
கயத்தாறில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
3. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த விவகாரம்: பெண் அதிகாரி உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதியின்றி சென்ற பெண் அலுவலர் சம்பூரணம் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
4. ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
5. நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீர் பணியிடை நீக்கம்
நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.