தேர்தல் செய்திகள்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + "||" + SC dismissed the plea for canceling the parliamentary elections in Tamil Nadu

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.  இதில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபைக்கான இடைத்தேர்தல் ஆகியவை கடந்த 18ந்தேதி நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 23ந்தேதி நடைபெறும்.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன.  ஆனால் பணப்பட்டுவாடா, வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்டவை நாடாளுமன்ற தேர்தலில் நடப்பதாகவும், எனவே தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுபற்றி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து விட்டதாக கூறி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளனர்.