தேர்தல் செய்திகள்

இத்தாலியில் இருந்து உறவினர்களை அழைத்து வந்தாலும் பிரதமராக மோடியே மீண்டும் வருவார்; ஸ்மிரிதி இரானி + "||" + People of India have already decided to choose PM again; Union Min Smriti Irani

இத்தாலியில் இருந்து உறவினர்களை அழைத்து வந்தாலும் பிரதமராக மோடியே மீண்டும் வருவார்; ஸ்மிரிதி இரானி

இத்தாலியில் இருந்து உறவினர்களை அழைத்து வந்தாலும் பிரதமராக மோடியே மீண்டும் வருவார்; ஸ்மிரிதி இரானி
இத்தாலியில் இருந்து உறவினர்களை அழைத்து வந்தாலும் பிரதமராக மோடியே மீண்டும் வருவார் என ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.
லக்னோ,

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.  இதற்காக அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.  காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

அமேதி மற்றும் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி உள்ளிட்ட தொகுதிகளுக்கான தேர்தல் மே 6ந்தேதி நடைபெறும்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ள மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி  உத்தர பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இந்தியா, இத்தாலி அல்லது உலகின் எந்த பகுதியில் இருந்தும் உங்களது உறவினர்களை அழைத்து வாருங்கள்.  இந்திய மக்கள் நியாயம் வழங்குவார்கள்.  அவர்கள் பிரதமராக மீண்டும் மோடியை தேர்வு செய்ய முன்பே முடிவு செய்து விட்டனர்.

ஆனால் இந்த முறை மொத்த காந்தி குடும்பத்திற்கும் ஒரு வலிமையான செய்தி தரப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ”இவிஎம் குறித்து தேவையற்ற சர்ச்சைகள் எழுகின்றன” கவலையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி
இவிஎம் குறித்து தேவையற்ற சர்ச்சைகளை அரசியல் கட்சிகள் எழுப்புவதாக பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தியதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
2. மோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு -கருத்து கணிப்பில் தகவல்
44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர் என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
3. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகம்: பிரதமர் மோடிக்கு முகம்மது நஷீத் வாழ்த்து
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
4. கேதர்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - இன்று பத்ரிநாத் செல்கிறார்
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கேதர்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் இன்று பத்ரிநாத் செல்ல உள்ளார்.
5. நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் - பிரதமர் மோடி உருக்கம்
நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் என பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.