தேர்தல் செய்திகள்

ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு - ஷீலா தீட்சித், அஜய் மக்கானுக்கு வாய்ப்பு + "||" + No ally with Aadmi: Congress nominees contesting in Delhi - Sheila Dikshit, Ajay Magan chance

ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு - ஷீலா தீட்சித், அஜய் மக்கானுக்கு வாய்ப்பு

ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை: டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு - ஷீலா தீட்சித், அஜய் மக்கானுக்கு வாய்ப்பு
டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதில் ஷீலா தீட்சித், அஜய் மக்கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் விரும்பியது. இதுதொடர்பாக இரு கட்சிகளும் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

ஆனால் தொடர்ந்து நடந்த இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததால், இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படாமல் போனது. இதனால் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்தது.


இதைத்தொடர்ந்து டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைமை நேற்று வெளியிட்டது. அங்கு மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 6 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதில் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ஷீலா தீட்சித்துக்கு வடகிழக்கு டெல்லி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர் பா.ஜனதா மாநில தலைவர் மனோஜ் திவாரியை அந்த தொகுதியில் எதிர்கொள்கிறார்.

முன்னாள் மாநில தலைவர் அஜய் மக்கானுக்கு புதுடெல்லி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மற்றொரு முன்னாள் தலைவரான அகர்வால், சாந்தினி சவுக் தொகுதியில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தனை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இதைப்போல மூத்த காங்கிரஸ் தலைவர் மகபால் மிஸ்ரா மேற்கு டெல்லி தொகுதியிலும், மாநில முன்னாள் கட்சித்தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கிழக்கு டெல்லி தொகுதியிலும் களம் காண்கின்றனர். வடமேற்கு டெல்லி தொகுதி, கட்சியின் செயல் தலைவர் ராஜேஷ் லிலோதியாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

தெற்கு டெல்லி தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. அங்கு ரமேஷ் குமார் சவுகான் அல்லது சுஷில் குமார் ஆகியோரில் ஒருவரை களமிறக்க கட்சி திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது ஆசிட் வீசிய பெண்
டெல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது பெண் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற குமாரசாமி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்-மந்திரி குமாரசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
3. டெல்லியில் மெட்ரோ ரெயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் மெட்ரோ ரெயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
4. மோடி தலைமையில் புதிய அரசு இன்று பதவி ஏற்பு: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
மோடி தலைமையில் இன்று புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #DCvsCSK