தேர்தல் செய்திகள்

மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: தனது வாக்கை பதிவு செய்த பின் பிரதமர் மோடி பேட்டி + "||" + Voter ID More Powerful Than IED," Says PM After Voting In Ahmedabad

மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: தனது வாக்கை பதிவு செய்த பின் பிரதமர் மோடி பேட்டி

மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: தனது வாக்கை பதிவு செய்த பின் பிரதமர் மோடி பேட்டி
மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அகமதாபாத்,

அகமதாபாத்தில் உள்ள நிசான் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி கூறியதாவது:- “ 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. எனது சொந்த மாநிலமான குஜராத்தில் எனது வாக்கினை பதிவு செய்யும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. 

கும்பமேளாவில் நீராடிய பின் துய்மை அடைவதை போல், ஜனநாயக திருவிழாவில் வாக்களித்த பின்பு அந்த தூய்மையை நாம் உணரலாம். வாக்காளர்கள் மிகவும் அறிவார்ந்தவகள், எது சரி, எது தவறு என்பது அவர்களுக்கு தெரியும்.” என்றார்.  

பிரதமர் மோடி வாக்களிப்பதற்காக ஜீப்பில் வருகை தந்தார். இரு புறமும் நின்ற அவரது ஆதரவாளர்கள் மோடி, மோடி என கோஷம் இட்டனர். 


தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் முன்னிலையில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய மோடி
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் முன்பாகவே பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு பாகிஸ்தான் என்றும் அவர் கடுமையாக சாடினார்.
2. அக்டோபர் 21-ந்தேதி குஜராத்தில் மேலும் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
அக்டோபர் 21-ந்தேதி குஜராத்தில் மேலும் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
3. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உள்ள சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
4. அமெரிக்காவில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி; வியந்த நெட்டிசன்கள்
அமெரிக்காவில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து புகழ்ந்துள்ளனர்.
5. பிரதமர் மோடி, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார்
பிரதமர் மோடி ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹூஸ்டன் நகர் சென்றடைந்துள்ளார்.