தேர்தல் செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு + "||" + AIADMK announced its candidates for by election

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட நேற்று முன்தினம் விருப்பமனு பெறப்பட்டது. விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அன்றைய தினமே, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது.  

நேற்று அதிமுக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்,  இன்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் விவி செந்தில்நாதன், ஒட்டப்பிடாரம் தொகுதியில் கே மோகன், சூலூர் தொகுதியில் கந்தசாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ் முனியாண்டி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தினகரனையும்-சசிகலாவையும் விமர்சிக்கும் நமது அம்மா கவிதை
ஆமைகள் புகுந்திட அதிமுக ஊமைகள் கூடம் ஆகுமாம்.. என நமது அம்மா கவிதை வெளியிட்டு உள்ளது.
2. 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு - நாங்குநேரியில் 23 பேர் போட்டி, விக்கிரவாண்டியில் 12 பேர் மோதுகிறார்கள்
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, நாங்குநேரி தொகுதியில் 23 பேரும், விக்கிரவாண்டியில் 12 பேரும் போட்டியிடுகிறார்கள்.
3. நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : சுவர் ஓவிய தொழிலாளர்கள் மகிழ்ச்சி
இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி-விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள வீட்டின் சுவர் மீது கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் வரைந்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
4. தமிழக அதிமுக அரசை குறிவைக்கும் தமிழக பாரதீய ஜனதா ஐடி பிரிவு
அதிமுக அரசின் தவறான செயல்களை அம்பலப்படுத்தவும், குறைபாடுகளை முன்னிலைப்படுத்தவும் பாஜகவின் தமிழக பிரிவு தனது தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளது.
5. எப்போதும் பணத்தை நம்பும் அதிமுகவிற்கு இடைத்தேர்தலில் தோல்விதான் கிடைக்கும் - கனிமொழி எம்.பி.
அதிமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...