தேர்தல் செய்திகள்

டெல்லியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி + "||" + Gautam Gambhir Among Delhi's Richest Lok Sabha Candidates

டெல்லியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி

டெல்லியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி
டெல்லியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், தனக்கு ரூ.147 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் அவர் தனது சொத்து விவரங்கள் பட்டியலை இணைத்துள்ளார்.

கவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 2017-18-ம் ஆண்டு மட்டும் தனக்கு ரூ.12.4 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவிக்கு ரூ.6.17 லட்சம் வருவாய் வந்திருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் பணக்கார வேட்பாளராக கவுதம் காம்பீர் திகழ்கிறார். அவர் தனது வேட்புமனுவில் தன் மீது ஒரே ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு இருப்பதாக கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூடுகிறது.
2. திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது ஆசிட் வீசிய பெண்
டெல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலர் மீது பெண் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற குமாரசாமி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்-மந்திரி குமாரசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
4. டெல்லியில் மெட்ரோ ரெயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் மெட்ரோ ரெயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
5. மோடி தலைமையில் புதிய அரசு இன்று பதவி ஏற்பு: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
மோடி தலைமையில் இன்று புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.