தேர்தல் செய்திகள்

நாடாளுமன்றத்துக்கு 4-ம் கட்ட தேர்தல்: 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியது + "||" + Voting begins for fourth phase of #LokSabhaElections2019 in 72 constituencies, across 9 states.

நாடாளுமன்றத்துக்கு 4-ம் கட்ட தேர்தல்: 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியது

நாடாளுமன்றத்துக்கு 4-ம் கட்ட தேர்தல்: 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியது
நாடாளுமன்றத்துக்கு 4-ம் கட்ட தேர்தல்: 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியது
புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்ற தேர்தல், பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த  நிலையில் இன்று (திங்கட்கிழமை) 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 961 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்து தீர்மானிக்கின்றனர்.

இன்று தேர்தலை சந்தித்துள்ள பீகாரின் 5, ஜார்கண்டின் 3, மத்திய பிரதேசத்தின் 6, மராட்டியத்தின் 17, ஒடிசாவின் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் தலா 13, மேற்கு வங்காளத்தின் 8, காஷ்மீரின் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 4-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 பெரிய மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் உள்ள 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  


இந்த 4-வது கட்ட தேர்தலுக்காக தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா (பா.ஜனதா), தேவேந்திர பட்னாவிஸ் (பா.ஜனதா), ராகுல் காந்தி (காங்கிரஸ்), பிரியங்கா (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), நவீன் பட்நாயக் (பிஜூஜனதாதளம்), உத்தவ் தாக்கரே (சிவசேனா) உள்ளிட்டவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டினர்.நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது.

இன்று ஓட்டுப்பதிவு நடந்து வரும் 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது. பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தல் மே மாதம் 6-ந் தேதி நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
2. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
3. வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு: இன்று மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
வேலூர் தொகுதிக்கு 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) மாலை முதல் கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பிறப்பித்துள்ளார்.
4. வேலூர் மக்களவை தேர்தல்: கதிர் ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைப்பு
வேலூர் மக்களவை தேர்தலில் திமுகவின் கதிர் ஆனந்தின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
5. பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராடுவோம்: ராகுல் காந்தி ஆவேசம்
பாஜகவுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.