தேர்தல் செய்திகள்

பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன் என பேசிய பிரக்யா சிங் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள தடை + "||" + EC bars BJP Bhopal candidate Pragya Singh Thakur from campaigning for 3 days

பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன் என பேசிய பிரக்யா சிங் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள தடை

பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன் என பேசிய பிரக்யா சிங் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள தடை
பா.ஜ.க.வின் போபால் மக்களவை தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.  இதுவரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.  தொடர்ந்து அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

தேர்தல் பிரசாரம் ஒன்றில் பா.ஜ.க.வின் போபால் மக்களவை தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் பேசும்பொழுது, பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன் என கூறினார்.  இதனால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பிரக்யா சிங், நாளை காலை 6 மணியில் இருந்து 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.