தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களை விட, மக்களுக்குத் தான் அதிகமாக இருக்கிறது -மு.க.ஸ்டாலின்


தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களை விட, மக்களுக்குத் தான் அதிகமாக இருக்கிறது -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 May 2019 12:13 PM IST (Updated: 2 May 2019 12:15 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களை விட, மக்களுக்குத் தான் அதிகமாக இருக்கிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில், விவசாயிகள், பொதுநல சங்க நிர்வாகிகள் மற்றும் உப்பள தொழிலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை, உப்பள தொழிலாளர்களுக்கு இயற்றப்பட்ட சட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குறைகளை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும், மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும். தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களை விட, மக்களுக்கே அதிகம் உள்ளது. மக்களவை தேர்தலில் கனிமொழியின் வெற்றி உறுதி. கட்சிகளை மறந்து இந்த ஆட்சியின் மீது மக்கள் கோபமாக இருக்கின்றனர்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 More update

Next Story