பாம்புகளுடன் விளையாடும் பிரியங்கா காந்தி... -வைரல் வீடியோ


பாம்புகளுடன் விளையாடும் பிரியங்கா காந்தி... -வைரல் வீடியோ
x
தினத்தந்தி 2 May 2019 12:44 PM IST (Updated: 2 May 2019 12:44 PM IST)
t-max-icont-min-icon

பாம்புகளுடன் விளையாடும் பிரியங்கா காந்தி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரேபரேலி

ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நிருபர்களிடம்  கூறியதாவது:-

காங்கிரஸ்-பாரதீய ஜனதா கருத்தியலில் இருவேறு துருவங்கள். நாங்கள் எப்போதும் அவர்களை எதிர்த்து போராடுவோம், அவர்கள் அரசியலில் நமது முக்கிய எதிரி. எந்த விதத்திலும் பிஜேபி பயனடையும் வகையில்  செயல்படமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். நாங்கள் கடுமையாக போராடுகிறோம், எங்கள் வேட்பாளர்கள் வலுவாக உள்ளனர் என கூறினார்.

ரேபரேலி தொகுதியில் இன்று பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரியங்கா, அங்கு வசிக்கும் மக்கள் வளர்க்கும் பாம்புகளுடன் விளையாடினார். அவர் பாம்புகளுடன் விளையாடும் அந்த வீடியோ தற்போது  சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

1 More update

Next Story