2வது கட்ட மக்களவை தேர்தல்; தமிழகத்தில் 72.01% வாக்கு பதிவு


2வது கட்ட மக்களவை தேர்தல்; தமிழகத்தில் 72.01% வாக்கு பதிவு
x
தினத்தந்தி 4 May 2019 10:06 AM GMT (Updated: 4 May 2019 10:06 AM GMT)

2019 நாடாளுமன்ற மக்களவைக்கான 2வது கட்ட தேர்தலில் தமிழகத்தில் 72.01% வாக்கு பதிவாகி உள்ளது. #LokSabhaelection

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.  இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்து உள்ளது.  இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் நடந்து முடிந்தது.  இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் 4 கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நிலவரம் பற்றி தெரிவித்துள்ளது.

இதன்படி, முதற்கட்ட தேர்தலில் 69.5%, 2வது கட்ட தேர்தலில் 69.44%, 3வது கட்ட தேர்தலில் 68.4% மற்றும் 4வது கட்ட தேர்தலில் 65.51% வாக்குகளும் பதிவாகி உள்ளன.  

தமிழகத்தில் 72.01% வாக்கு பதிவாகி உள்ளது.  இதேபோன்று புதுச்சேரியில் 81.19% வாக்கு பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Next Story