தேர்தல் செய்திகள்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த மற்றொரு எம்.எல்.ஏ. + "||" + AAP MLA Devinder Sehrawat joins BJP

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த மற்றொரு எம்.எல்.ஏ.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த மற்றொரு எம்.எல்.ஏ.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து மற்றொரு எம்.எல்.ஏ. விலகி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்து கொண்டார்.
புதுடெல்லி,

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. அனில் பாஜ்பாய்.  காந்தி நகர் தொகுதியை சேர்ந்த இவர் கடந்த வாரம் வெள்ளி கிழமை அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்த நிலையில், பிஜ்வாசன் தொகுதியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான தேவிந்தர் சிங் ஷெராவத் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார்.  பின்னர் அவர் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், டெல்லி பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஷெராவத், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் கூட அழைக்கப்படாமல் தவிர்க்கப்பட்டேன்.  கட்சியில் ஓரங்கட்டப்பட்டேன் என குற்றச்சாட்டாக கூறினார்.