மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிக்கை: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிக்கை: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 9 May 2019 2:45 AM IST (Updated: 9 May 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிய மனு மீதான வழக்கினை, அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

மதுரை நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளரான கே.கே.ரமேஷ், ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு அதிகமாக பணம் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாகவும், இதேபோல் பிற வேட்பாளர்களும் பணப்பட்டுவாடா செய்வதால் தேர்தல் நியாயமாக நடைபெறாது என்றும், எனவே மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த மாதம் 15-ந் தேதி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கே.கே.ரமேஷ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெயசுகின் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிவாளர் அலுவலகத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினார்கள்.

1 More update

Next Story