தேர்தல் செய்திகள்

பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு + "||" + "Thank You," Says BJP As Party Crosses 11 Million Followers On Twitter

பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு
பாஜகவின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.
 பாஜகவின் தகவல் தொடர்பு பிரிவின் தலைவர் அமித் மாளவியா, இதற்காக நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை 50 லட்சத்து 14 ஆயிரம் பேர் பின்தொடரும் நிலையில், இந்த போட்டியில் பாஜக முன்னணியில் உள்ளது. இதேபோல் அதிக நபர்களால் பின் தொடரப்படும் அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அவரை 4 கோடியே 72 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர். இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, 10 கோடியே 60 லட்சம் பேரால் பின்தொடரப்படுகிறார். இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சுமார் 90 லட்சத்து 4 ஆயிரம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.