தேர்தல் செய்திகள்

பிரதமர் மோடிக்கு எதிரான பேச்சு: சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் + "||" + Sidhu in fresh EC trouble for his remarks against PM Modi

பிரதமர் மோடிக்கு எதிரான பேச்சு: சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் மோடிக்கு எதிரான பேச்சு: சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாஜக கூறிய குற்றச்சாட்டையடுத்து, சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து, சமீபத்தில் பிரசாரத்தில் பேசுகையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். 

சித்து கூறும் போது, ரபேல் ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி பணம் பெற்றதாகவும், தேசிய வங்கிகளில் கொள்ளையடித்த பெரும் பணக்காரர்களை நாட்டை விட்டு தப்பி ஓட அனுமதித்து விட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார். 

சித்துவின் இந்த பேச்சு, மோடியை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாக பாஜக சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது. பாஜகவின் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கருதிய தேர்தல் ஆணையம்,  சித்துவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஒரு நாளில் பதிலளிக்க வேண்டும் என்று இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, பீகாரில் முஸ்லீம் மக்களிடையே சித்து பேசிய பேச்சுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்ததோடு, 72 மணி நேரம் பிரசாரம் மேற்கொள்ளவும் தடை விதித்தது நினைவிருக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. யோகாவை வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வலியுறுத்தல்
யோகா, அனைத்துக்கும் மேலானது என்றும், அதை வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
2. இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து; பிரதமர் மோடி இரங்கல்
இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
3. ஒரு தேசம், ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் மோடி குழு அமைப்பு
ஒரு தேசம், ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் மோடி குழுவை அமைப்பதாக அறிவித்துள்ளார்.
4. பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் -மாயாவதி
பிரதமர் மோடி வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டால் கலந்து கொள்வேன் என மாயாவதி கூறியுள்ளார்.
5. பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நன்றி
பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...