ஸ்டாலின்- சந்திரசேகர ராவ் சந்திப்பு ஒரு சம்பிரதாய சந்திப்பாகவே அமையும் - பிரேமலதா விஜயகாந்த்


ஸ்டாலின்- சந்திரசேகர ராவ் சந்திப்பு ஒரு சம்பிரதாய சந்திப்பாகவே அமையும் - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 13 May 2019 7:14 AM GMT (Updated: 13 May 2019 7:14 AM GMT)

ஸ்டாலின்- சந்திரசேகர ராவ் சந்திப்பு ஒரு சம்பிரதாய சந்திப்பாகவே அமையும் என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.

சென்னை,

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- 

தேர்தல் முடிந்து ஒரே வாரத்தில் முடிவுகள் வெளியாகும்.  ஆதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. தமிழகம் முழுவதும்  தண்ணீர் தட்டுப்பாடு  நிலவுகிறது. இதற்கு தான் நதி நீர் இணைப்பை வலியுறுத்துகிறோம். பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் நதிநீர் இணைப்பை முக்கிய கோரிக்கையாக பிரதமரிடம் வலியுறுத்துவோம்.

தண்ணீர் பிரச்சினையை தமிழக அரசு உடனடியாக தீர்க்க வேண்டும். நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் பிரச்சினைக்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மக்களுக்கு குடிநீரை லாரிகள் மூலம் அனுப்ப வேண்டும்.

இடைத்தேர்தல் முடிந்தவுடன் அமைச்சர்கள் அரசு பணிகளில் முழு கவனம் செலுத்துவார்கள். ஸ்டாலின்- சந்திரசேகர ராவ் சந்திப்பு ஒரு சம்பிரதாய சந்திப்பாகவே அமையும். நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கூறினார்.

Next Story