தேர்தல் செய்திகள்

பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - காங்கிரஸ் + "||" + Neither BJP nor NDA will form govt at Centre Ghulam Nabi Azad

பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - காங்கிரஸ்

பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - காங்கிரஸ்
பா.ஜனதாவோ, என்டிஏ கூட்டணியோ மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
பீகாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்காக  நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்த எனது அனுபவத்தில் ஒன்றை சொல்கிறேன். பா.ஜனதா கட்சியோ அல்லது அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியோ மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. நரேந்திர மோடியும் 2–வது முறையாக பிரதமராக முடியாது. 

தேர்தல் முடிந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத, பா.ஜனதா அல்லாத அரசு தான் மத்தியில் அமையும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மத்திய அரசுக்கு தலைமை தாங்குவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயர் ஒருமித்த கருத்துடன் பரிந்துரைக்கப்பட்டால் நல்லது. அதேசமயம் காங்கிரசுக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் நாங்கள் வேறு எந்த தலைவரையும் பிரதமர் பதவிக்கு ஏற்க மாட்டோம் என்ற பிரச்சினையை உருவாக்க விரும்பவில்லை எனக் கூறினார்.

பா.ஜனதா கட்சிக்கு 125 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்ற அவர், காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை கூற மறுத்து விட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க தடை விதிப்பு
பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
2. பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு
பிரதமர் மோடியை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
3. காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு?
காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
4. மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அரசின் பதவி காலம் முடிகிறது - சட்டசபை தேர்தல் தேதி வெளியாகிறது
கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் மராட்டிய சட்டசபை தேர்தல் தேதி ஆனந்த சதுர்த்திக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
5. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரை; அதே நாளில் இம்ரான் கானும் பேசுகிறார்
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதே நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உரையாற்றவுள்ளார்.