தேர்தல் செய்திகள்

மம்தாவின் கோபத்தால் பாஜகவுக்கு மேற்குவங்க மக்களின் ஆதரவு பெருகியுள்ளது - பிரதமர் மோடி + "||" + Paint an ugly portrait of mine. Gift it to me after BJP sweeps polls: PM Modi taunts Mamata Banerjee

மம்தாவின் கோபத்தால் பாஜகவுக்கு மேற்குவங்க மக்களின் ஆதரவு பெருகியுள்ளது - பிரதமர் மோடி

மம்தாவின் கோபத்தால் பாஜகவுக்கு மேற்குவங்க மக்களின் ஆதரவு பெருகியுள்ளது - பிரதமர் மோடி
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் கோபத்தால் பாஜகவுக்கு மக்களின் ஆதரவு பெருகி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,

2019 நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக இறங்கியுள்ளார்.  

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பிஷரத் நகரில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:- 

கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பேரணியில் மம்தா பானர்ஜி அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு பழி வாங்குவேன் என்று கூறிய மம்தா பானர்ஜி அதனை செயல்படுத்தி விட்டார்.  

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ஊடுருவல்கள் முற்றிலும் தடுக்கப்படும். மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. 

சகோதரி மம்தாவின் கோபத்தால் பாஜகவுக்கு மேற்குவங்க மக்களின் ஆதரவு பெருகியுள்ளது.  மம்தாவின் பதற்றத்தை பார்க்கும் போது பாஜக 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறும் என்று கருதுகிறேன்.  மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையைக் மம்தா பானர்ஜி நெரித்து விட்டார் என்று குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியிடம் தேர்தல் கமிஷன் சரணாகதி அடைந்து விட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மோடியிடம் தேர்தல் கமிஷன் சரணாகதி அடைந்து விட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்
மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் எனவும், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 34 தொகுதிகள் வரையில் கிடைக்கும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. "முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்
பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும் என திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளது.
4. நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் - காங்கிரஸ் கருத்து
தேர்தல் ஆணைய பிரச்சனையில் நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
5. ‘பிரித்தாளும் தலைவர்’ பிரதமர் மோடி குறித்து `டைம்’ பத்திரிகை கட்டுரை பாரதீய ஜனதா கண்டனம்
பிரதமர் மோடியை `டைம்’ பத்திரிகை சமீபத்தில், ‘பிரித்தாளும் தலைவர்’ என சித்தரித்து கட்டுரை வெளியிட்டது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.