தேர்தல் செய்திகள்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு + "||" + BJP Congress Lock Horns in Kanyakumari Makkal Yaar Pakkam

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் கடும் போட்டியிருக்கும் என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பா.ஜனதா சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கும் இடையே மிகவும் நெருக்கடியான போட்டி நிலவுகிறது. ஏப்ரல் 18-ம் தேதி மக்கள் வாக்களித்த பின்னர் அவர்களிடம் இருந்து யாரிடம் வாக்களித்தீர்கள் என கேட்டு அறியப்பட்ட கருத்துக்கணிப்பில் இருவருக்கும் இடையே ஒரு சதவிதம் மட்டுமே வேறுபாடு காணப்படுகிறது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு 40-46 சதவீதம் பேர் வாக்களித்ததாக கூறியுள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 39-45 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 5-8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திற்கு 4-7 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 3-6 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.